என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் தாக்குதல்"
ஒரத்தநாடு அருகே காரமணிதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது-23). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும் இன்னொரு தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரியும் அரசபட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் (24) என்பவருக்கும் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் முருகேசன் ஒரத்தநாட்டிலிருந்து தஞ்சை நாஞ்சிக்கோட்டைக்கு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது அவருக்கு பின்னால் பஸ்சை ஓட்டி வந்த ஆனந்தராஜ், முருகேசன் ஓட்டிய பஸ்சுக்கு முன்பு சென்று அவரை தாக்கியதுடன் பஸ்சின் சைடு கண்ணாடியையும் உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி முருகேசன் தமிழ் பல்கலைக்கழகப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார், அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.
சென்னை:
சென்னை சூளைமேடு அண்ணாநெடும் பாதையை சேர்ந்தவர் மணிகண்டன். (வயது32). ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் நேற்று இரவு 7 மணி அளவில் அங்குள்ள ஒரு பாரில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது நண்பர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. போதைஅதிகமான மணிகண்டனை அவரது நண்பர்கள் அருகில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் வெட்டி மது பாட்டிலால் தாக்கினார்கள்.
அவரது தலையிலும், கைகளிலும் வெட்டு காயம் விழுந்தது. அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஜோதி ராமலிங்கம் தெருவில் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் என்பவரை கைது செய்தனர். வெள்ளை ராஜேஷ், வாட்டர் சர்வீஸ் ராஜேஷ், பிரசாத், செல்லா, சின்ன செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே எழும்பூர் தென்சாலையில் உள்ள மதுபாரில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த இப்ராகிம் தகராறு செய்து மதுபாட்டில்களை உடைத்துள்ளார். நண்பர்களோடு சேர்ந்து மது குடித்த அவர் அதிகமாக பில் போடப்பட்டுள்ளதாக கூறி பார் ஊழியரான லிங்கேஸ்வரனை கன்னத்திலும் ஓங்கி அறைந்துள்ளார்.
இதுபற்றி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போதையில் தகராறு செய்த இப்ராகிமிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விழுப்புரம்:
மதுரை பழங்கானத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகளை பார்க்க கணேசன் முடிவு செய்தார். இதற்காக அவர் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்திருந்தார்.
இதையொட்டி நேற்று மாலை கணேசன் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை மதுரை பாலரங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் டேனியல்(40) ஓட்டி சென்றார். இரவு 12 மணியளவில் அவர்கள் சென்னை சென்றடைந்தனர்.
பின்னர் கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார்.
தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் கொடுத்தனர். அதன்பிறகு அவர் காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் காரை நிறுத்தம்படி கூறினார்.
உடனே கிறிஸ்டோபர் டேனியல் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிறிஸ்டோபர் டேனியல் தலையில் தாக்கினர்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்பு அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து காரை கடத்தி சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் டேனியலுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிறிஸ்டோபர் டேனியலை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது குறித்து விழுப்புரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படை ஒன்று அமைத்தார். தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரை கடத்தி சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை:
வேடசந்தூரில் இருந்து பூசாரிப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை இந்த பஸ் பூசாரிப்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த போது குரும்பபட்டி அருகே பின்னால் வந்த வாகனத்துக்கு வழி விடாததால் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் பஸ்சில் ஏறி டிரைவர் முருகனிடம் தகராறு செய்தனர். மேலும் இரு தரப்பினரும் பஸ்சுக்குள்ளேயே மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டிரைவர் முருகன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி வழக்கு பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்